News November 11, 2024
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதை கமென்டில் தெரிவிக்கவும்
Similar News
News September 11, 2025
சென்னையில் 12 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (11.09.2025) 12 இடங்களில் நடைபெற உள்ளது. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.
News September 11, 2025
சென்னைக்கு இடி, மின்னலுடன் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, சென்னைக்கு இன்று(செப்.11) இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.
News September 11, 2025
அடையாளமே மாறும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பூங்கா ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை சென்ட்ரலில் உள்ள இந்த பூங்கா ரயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.