News December 18, 2024

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச.17) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையடுத்து, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 29, 2025

சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும் ▶️விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News August 29, 2025

சென்னையில் மின்தடையா?

image

சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மின் தடை பிரச்சனைக்கு இனி கவலை வேண்டாம். ▶️ வட சென்னைக்கு 94440 99255, ▶️ மத்திய சென்னைக்கு 94458 50739, ▶️ சென்னை மேற்கு பகுதிக்கு 94983 78194, ▶️ சென்னை தெற்கு பகுதிக்கு 91500 56672, ▶️ சென்னை கிழக்கு பகுதிக்கு 91500 56673 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 29, 2025

சென்னையில் 6 மண்டலங்களில் குடிநீர் வினியோகம் தடை

image

சென்னையில் வரும் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை ஆறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. முக்கியமான குழாய் இணைப்புப் பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது. மாதவரம், திரு.வி.க. நகர் அம்பத்தூர், அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம் வடபழனி ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

error: Content is protected !!