News August 17, 2025

சென்னையில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

image

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <>இணையதளத்தில் <<>>புகார் அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார் அளியுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17431996>>தொடர்ச்சி<<>>

Similar News

News March 3, 2026

JUST IN: சென்னையில் கோர விபத்து!

image

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று(மார்ச் 3) அதிகாலை இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானன. இந்த விபத்தில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஜூனு(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.

News March 3, 2026

சென்னை: ஏடிஎம் வாசலில் நூதன மோசடி

image

எம்.கே.பி.நகர், 12வது தெருவைச் சேர்ந்தவர் பிஷு சர்தா (31). கேட்டரிங் ஊழியர். நேற்று முன்தினம் காலை, ஏ.டி.எம்-ல் பணம் செலுத்த சென்றார். அங்கிருந்த நபர், பணத்தை வாங்கி கொண்டு ஆன்லைன் வாயிலாக, வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புவதாக கூறிவிட்டு, அங்கிருந்து தப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எம்.கே.பி.நகர் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 2, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!