News October 25, 2025
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றும்(அக்.25) அதே விலையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News October 25, 2025
சென்னையில் இந்த Certificate பெறுவது எப்படி?

1)தமிழக அரசின் <
2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.
3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.
4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.
5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
News October 25, 2025
சென்னை: களப்பணியில் 22,000 பணியாளர்கள்!

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News October 25, 2025
அடையாறு ஆற்றில் சீரமைப்புப் பணி!

அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பு நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து 24.10.2025 அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி இயந்திரங்களுடன் பணிகள் நடைபெற்றன.


