News October 11, 2025

சென்னையில் பிரபல நடிகர் வீட்டிற்கு மிரட்டல்

image

சென்னை மந்தைவெளியில் உள்ள பிரபல நடிகர் எஸ்.வி சேகரின் வீட்டுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 11, 2025

பெசன்ட் நகர் கடலில் மூழ்கி மாணவர் பலி

image

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை 3 கல்லூரி மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். கடல் அலையில் சிக்கி பிரகாஷ் (22) என்கிற மாணவன் உயிர் இழந்துள்ளார். கடல் அலையில் அடித்து சென்ற மாணவன் ரோகித் சந்திரணை போலிசார் தேடி வருகின்றனர். மேலும் ஒருவர் கார்த்திக் (24)சிகிச்சை பெற்று வருகிறார். பெசன்ட் நகர் போலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 11, 2025

பெண் மேலாளரை மிரட்டிய ஜிம் உரிமையாளர் கைது

image

திருமுல்லைவாயலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னையில் 15 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார். அதில் ஆழ்வார்பேட்டையில் உடற்பயிற்சி கூடத்தின் பெண் மேலாளரிடம் தனியாக ஜிம் வைத்து தருவதாக கூறி அப்பெண் பெயரில் வங்கியில் ரூ.1.75 கோடி கடன் வாங்கியுள்ளார். கடனை கேட்டபோது சீனிவாசன் மிரட்டியதாக இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

News October 11, 2025

சென்னையில் புதன் தோறும் அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

வட சென்னை மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தின் மூலம் இது வரை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் மாற்று திறனாளிகளுக்கு மருத்துவர் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. இனி வரும் 15ம் தேதி முதல் புதன் கிழமை தோறும் நடைபெறும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!