News February 1, 2026
சென்னையில் பாலியல் தொழில்- 2 பேர் கைது

சென்னை விபச்சார தடுப்புப் பிரிவு-1 குழுவினர், நேற்று பெரியமேடு, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தபோது, ஒரு அறையில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பெண் காவலர்கள் உடன் நடத்திய சோதனையில், அப்துல்கரீம் (35, அசாம்) மற்றும் பரசுராம் பெஹேரா (42, ஒடிசா) கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண் மீட்கப்பட்டார்.
Similar News
News February 16, 2026
சென்னையில் இங்கெல்லாம் இன்று மின்தடை

சென்னையில் இன்று (பிப்.16) பரமரிப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன்படி அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா ஸ்ரீநிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், எரிகரை சாலை, வெங்கடேஸ்வரா நகர். ராமபுரம்: மங்கள நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆர்.இ நகர், வன்னியர் தெரு மற்றும் வியாசர்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.
News February 16, 2026
JUST IN: சென்னையில் இன்று இது இயங்காது!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மாநகர பேருந்துகளில் தற்காலிகமாக ETMS மூலம் டிக்கெட் வழங்கப்படாது என சென்னை MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி UPI PAYMENTS, NCMC CARDS, DEBIT/CREDIT CARD, CHENNAI ONE உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்த முடியாது. பிரச்னை சரிசெய்யப்படும் வரை அச்சிடப்பட்ட டிக்கெட் வழங்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. *பயனுள்ளதாக இருக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க*
News February 16, 2026
சென்னை: அலறிய நர்ஸ்கள்.. சிக்கிய ஆபாச இளைஞர்

சென்னை கொளத்தூரில் செவிலியர்கள் தங்கி இருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்தது தெரியவந்தது.


