News January 23, 2026
சென்னையில் பாலியல் தொழில் – அதிரடி கைது

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு – 2 குழுவினர், ஜாபர்கான்பேட்டை, காசி எஸ்டேட் 3வது தெருவில் உள்ள வீட்டை கண்காணித்தனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டதால், சோதனை நடத்தினர். இதில், சம்சுதீன் மற்றும் முகம்மது சையது ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
Similar News
News January 23, 2026
BREAKING: சென்னையில் கனமழை வெளுக்கும்

சென்னையில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News January 23, 2026
சென்னையில் EB பில் எகுறுதா..?

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News January 23, 2026
சென்னை: சமயலறையில் தீப்பற்றி ஒருவர் பலி

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் முருகன் (46). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சமையல் பொருட்களுக்கு மேலே இருந்த மண்ணெண்ணைய் பாட்டில் கீழே விழுந்ததில், சமையல் அறை முழவதும் தீ பற்றி முருகன் உடலிலும் பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


