News December 11, 2025
சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.
Similar News
News December 11, 2025
சென்னை: ரேஷன் அட்டை உள்ளதா? முக்கிய அறிவிப்பு!

பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் டிச.13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 11, 2025
சென்னை சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. ரஜினியின் 50 ஆண்டு கால சாதனையை கொண்டாடும் வகையில் பாட்ஷா திரைப்படம் திரையிடப்படுகிறது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர்.
News December 11, 2025
சென்னை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

சென்னை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <


