News March 22, 2025
சென்னையில் பள்ளிகள் இயங்கும்

சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இன்று (மார்.22) இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுவும், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரும் விடுமுறை என்று நினைத்து வீட்டிலேயே தூங்கி விடாதீர்கள். மறக்காமல் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 24, 2025
கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.21% நீர் இருப்பு உள்ளதால், இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகருக்கு மாதம் தோறும் 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 8 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 24, 2025
சென்னை பேருந்துகளில் இலவச பயணம்

18வது சீசனின் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியானது. இதில் சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து, போட்டிக்கு 3 மணி நேரம் முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரம் வரையும் இலவசமாக பயணிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
News March 24, 2025
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (மார்ச்.24) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.