News January 27, 2026

சென்னையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

image

த.வெ.க சார்பில் நாளை சென்னையில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (ஜன.28) புதன்கிழமை மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.சந்திரா அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Similar News

News February 3, 2026

JUST IN: சென்னை: பள்ளிக்கு கஞ்சாவுடன் வந்த மாணவன்

image

சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர். இதில், 11ஆம் வகுப்பு மாணவனிடம் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 5 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா புகாரின் பேரில், MKBநகர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

News February 3, 2026

சென்னையில் தொடரும் கொடூரம்!

image

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் 10ம் வகுப்பு மாணவிக்கு வாலிபர் ஒருவர் தவறான செய்கையின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரியும் கௌசல்யாவின் கணவர் பூபாலன், மாணவியிடம் செல்போன் நம்பரை வலுக்கட்டாயமாக கேட்டதுடன், தவறான செய்கை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பூபாலனை நேற்று கைது செய்தனர்.

News February 3, 2026

சென்னை: நொடி பொழுதில் கோரம்; தலைநசுங்கி பலி

image

தாம்பரம் அடுத்த படப்பையில், கணவரைப் பார்க்க ஆவலோடு சென்ற மனைவி பைக் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவரைப் பார்ப்பதற்கு நேற்று (பிப்.2) துபாய் செல்ல இருந்த வர்ஷா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வேனின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், அதில் மோதிய வர்ஷா கீழே விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

error: Content is protected !!