News August 22, 2024
சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிண்டி – ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஆக.23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்து பங்கேற்கலாம் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
சென்னை: திரைப்பட பாணியில் பிரபல ரவுடி கைது!

சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி பினு, சூளைமேட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த 75 பேரை சுற்றி வளைத்து பினுவை, போலீசார் நேற்று (டிச.10) கைது செய்தனர்.
News December 11, 2025
சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.