News April 18, 2024
சென்னையில் நாளை இலவச ரேபிடோ சேவை

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற Code ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.
Similar News
News December 11, 2025
சென்னை சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்

23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 51 நாடுகளில் இருந்து 122 திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. ரஜினியின் 50 ஆண்டு கால சாதனையை கொண்டாடும் வகையில் பாட்ஷா திரைப்படம் திரையிடப்படுகிறது. ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர்.
News December 11, 2025
சென்னை: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

சென்னை மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
சென்னை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


