News November 1, 2025
சென்னையில் நவ :5 ல் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் அனைத்து மாவட்டத்தின் செயலாளர்கள் உடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் அ.தி.மு.கவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் பின்பு இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
Similar News
News November 1, 2025
சாலைகளை சீரமைக்க ரூ.15 கோடி செலவில் புதிய திட்டம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமாவதை தொடர்ந்து 15 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சாலை பணியாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட இருக்கிறது. வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் ₹37 கோடியில் 286 சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தற்போது, 257 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நிலைக்குழு (பணிகள்) தலைவர் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
அக்டோபர் மாதத்தில் 93.27 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 93,27,746 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக அக்டோபர் 17ம் தேதி மட்டும் 4,02,010 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கி வரும் மெட்ரோ நிறுவனத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 1, 2025
சென்னை மெரினாவில் நாளை கலைவிழா

சென்னை நாளை மெரினாவில் கலைவிழா நாளை (நவ.2 ) நடைபெறவுள்ளது. இதில், நெடுக்குச்சியாட்டம், மான் கொம்பு ஆட்டம், ஒயிலாட்டம், வீரமும், இசையும், திறமைகளும் சங்கமிக்கும் மேடையாக இந்த விழா அமையவுள்ளது. நேரம்: மாலை 5:30 மணிக்கு இடம்: நீலக் கொடி பகுதி, மெரினா கடற்கரை. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து கண்டுகளிக்குமாறு மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த WEEK ENDக்கு இங்கு போய் VIBE பண்ணுங்க.


