News October 28, 2024
சென்னையில் நவ.1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் நவ.1ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 2, 2026
மீண்டும் சாதித்து காட்டிய சென்னை மருத்துவமனை!

சென்னை, மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் பாதிக்கப்பட்ட மருத்துவ கல்வி மாணவி ஒருவர், அதிநவீன நரம்பியல் சிகிச்சைக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் குணமடைந்த நிலையில், மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இதில் மருத்துவமனையின் முதல்வர் & மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
News February 2, 2026
சென்னையில் அரங்கேறிய கொடூரம்!

சென்னை ஆலந்துார் பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்த 35 வயது பெண், பழ வியாபாரியான நாகராஜன்(42) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது 15 வயது மகளுடன், நாகராஜனுடன் ஒரே வீட்டில் வசித்துள்ளார். தாய், வீட்டில் இல்லாதபோது, நாகராஜன் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று நாகராஜனை கைது செய்தனர்.
News February 2, 2026
சென்னை: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8610999482, 9500190590 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


