News March 7, 2026
சென்னையில் நள்ளிரவில் உயர்ந்த சிலிண்டர் விலை

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 868 ரூபாயிலிருந்து 928 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்த நிலையில் 928 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50க்கு விற்கப்படுகிறது.
Similar News
News March 11, 2026
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை சார்பில் மரியாதை

தமிழக ஆளுநராக பணியாற்றிய ஆர்.என். ரவி, மேற்கு வங்காளம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மக்கள் மாளிகையில் இருந்து புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் மாண்புமிகு ஆளுநரை வழியனுப்பினர்.
News March 11, 2026
சென்னையில் 12 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று(மார்ச் 11) துபாய், அபுதாபி செல்லவிருந்த 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. காலை 8.05 மணிக்கு டில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. பைலட் வராததால் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் SG.2923 (சென்–கொச்சி), SG.640 (சென்–மக்கா) ரத்து செய்யப்பட்டன.
News March 11, 2026
சென்னை – அரக்கோணம் இடையே ஏசி ரயில் சேவை

சென்னை: கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியதைத் தொடர்ந்து, தற்போது சென்னை – அரக்கோணம் இடையிலும் ஏசி ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இரண்டாவது ஏசி ரயில் தயாரிப்பு பணிகள் ஐசிஎப் தொழிற்சாலையில் முடிந்து ரயில்வேக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் வேக சோதனைக்கு பிறகு இந்த சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


