News October 25, 2024

சென்னையில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னையில் உள்ள 2 ஓட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள (ரெஸிடென்சி, ராஜ் பார்க்) 2 ஓட்டல்களுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தி.நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில், வெறும் புரளி என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து யார் அந்த நபர் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி; சென்னையில் முகாம்

image

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி, சிப் பொருத்துவதை சென்னை மாநகராட்சி கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (நவ.09) பல்வேறு பகுதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் 16, 23ம் தேதிகளில் முகாம் நடைபெறும் நிலையில், தடுப்பூசி செலுத்தாத நாய் உரிமையாளர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

News November 9, 2025

சென்னை: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

image

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <>இங்கே கிளிக்<<>> செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும். 2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். 3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும். 4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும். 5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

News November 9, 2025

சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!