News April 7, 2024
சென்னையில் தீவிர கண்காணிப்பு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர், சேப்பாக்கம், எழும்பூர், பெசன்ட் நகர் பகுதியில் இன்று காலை முதலே பறக்கும் படை சோதனை நடைபெறுகிறது. நேற்று இரவு ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 29, 2026
சென்னை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

சென்னை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 29, 2026
கோயம்பேட்டில் தக்காளி கிலோ. 6-க்கு விற்பனை!

கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.
News January 29, 2026
சென்னை: முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம்

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்ட நிலவரம் இன்று (ஜன.29) வெளியிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3381 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 3046 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் 914 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 532 மில்லியன் கன அடி நீர் இருப்பதாக தெரிவித்துள்ளது.


