News November 13, 2025
சென்னையில் தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பாபன் மண்டல் (24). இவர், டி.பி.சத்திரம் பகுதியில் தங்கி, வீட்டு பராமரிப்பு வேலை பார்த்து வந்தார். பாபன் மண்டல் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தந்தை அவரை திட்டி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
சென்னை: டிகிரி/ டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் Sales Consultant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு டிகிரி/ டிப்ளமோ முடித்த 22- 30 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 வழங்கப்படும். இந்த பணிக்கு 1-3 வருடம் அனுபவம் அவசியம். விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
சென்னை: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
News November 13, 2025
ரம்யாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, அபிராமபுரத்தில் உள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அலுவலக மின்னஞ்சலுக்கு இந்த மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டு, சோதனை நடைபெற்றது. பின், அது புரளி என தெரியவந்தது.


