News January 11, 2025

சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி இந்த இரு தினங்களில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

BREAKING: சென்னையில் பறவை காய்ச்சல்

image

சென்னை அடையாறில் திடீரென 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. அவைகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அந்த காகங்கள் தீவிர H5N1 பறவைக்காய்ச்சலால் கொத்துக்கொத்தாக உயிரிழந்தது தெரியவந்து. மேலும், பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 5, 2026

சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். ஷேர் பண்ணுங்க.

News February 5, 2026

பேராசிரியர் வ. ஜெயதேவன் காலமானார்!

image

அகராதியியலாளரும், பேராசிரியருமான வ. ஜெயதேவன் காலமானார். சென்னை பல்கலைக் கழகத் தமிழ் மொழித்துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேரகராதி விரிவாக்க திட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈபடுத்தி கொண்டவர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் அகராதியியலாளர்களிடையே ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!