News August 6, 2025

சென்னையில் செஸ்தொடர் ஒத்திவைப்பு

image

சென்னை ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கவிருந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹையாத் நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் தங்கியிருந்த வீரர்கள் அனைவரும் பாதுக்காப்பாக வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News August 7, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

சென்னையில் இன்று (ஆக.7) சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, அடையார், ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<> இந்த லிங்கை கிளிக் செய்து <<>>தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 6, 2025

போராட்ட களத்தில் சின்மயி

image

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை தனியாருக்கு மாற்றுவதை கண்டித்தும், நிரந்தர வேலை கோரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையின் வெளியே கடந்த ஆக.1-ம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பின்னணி பாடகி சின்மயி இன்று நேரில் வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும், போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.

News August 6, 2025

சென்னை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டுமையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10th தோல்வி, தேர்ச்சி, 12th, பட்டயப்படிப்பு முடித்து பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள் கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் என்றார். (SHARE )

error: Content is protected !!