News January 4, 2026

சென்னையில் சிறுமி உடல் நசுங்கி பலி!

image

வத்தலகுண்டுவை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு பிரதிக்ஷா (9) அர்சத் (4) என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களிருவரும் சென்னை MMDA பகுதியிலுள்ள உறவினர் மோகனசுந்தரம் வீட்டிற்கு விடுமுறைக்காக வந்த நிலையில், மூவரும் டூவீலரில் வெளியே சென்றனர். கோயம்பேடு மேம்பாலத்தில் பின்னால் வந்த லாரி மோதி டூவீலர் கீழே விழுந்ததில், லாரி சக்கரம் பிரதிக்ஷா மீது ஏறி இறங்கியது. இதில் அவர் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 30, 2026

சென்னையில் கரண்ட் கட்

image

சென்னையில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கரணை, செம்பியம், முகப்பேர், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின் தடை செய்யப்படும். அதே போல் நாளை (ஜன.31) முகலிவாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

சென்னை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card என Spam Calls வருவதால், நமக்கு டென்ஷன்தான் மிச்சம். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!