News August 13, 2024

சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, நாளை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு 470 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 18, 2025

BREAKING: சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

image

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று (செ.18) உடல்நலக் குறைவால் காலமானார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், துரைப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முன்னதாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை காரணமாக உடல் பலவீனமடைந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 18, 2025

அரசு தொழிற்­ப­யிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

image

தமிழ்­நாடு அரசு வேலை­வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் திருவொற்றியூர் அரசு தொழிற்­ப­யிற்சி நிலையத்தின் நேரடி மாணவர் சேர்க்கை செப்.30 வரை நீட்டிக்­கப்­ப­டுள்­ளது என சென்னை மாவட்ட ஆட்­சித் தலை­வர் ரஷ்மி சித்­தார்த் ஜகடே தெரிவித்­துள்­ளார்.இதில் 14 வயது முதல் 40 வரை உள்ள ஆண்­கள் பயிற்­சியில் சேர்ந்து பயன்­ பெ­றலாம். பயிற்சியில்
சேருப­வர்­க­ளுக்கு பயிற்சிக் கட்­ட­ணம் கிடையாது.

News September 18, 2025

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <>இந்த லிங்க்<<>> (அ) 9499966026 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!