News December 26, 2025

சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

image

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.

Similar News

News December 26, 2025

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News December 26, 2025

சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

image

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல், 19ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறுவது, வரும் ஜன., 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. என்.என்.என் இதில், தகுதியான குடிமக்கள் விண்ணப்பிக்க வசதியாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும், வரும் 27, 28, ஜன., 3, 4ஆகிய தேதிகளில்,சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2025

சென்னையில் 24 பைக் பறிமுதல்

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ‘பைக் ரேஸ்’ ரோமியோக்கள் நேற்று முன்தினம் இரவு, சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலைகளில் அட்டகாசம் செய்து, மற்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் மிரள வைத்தனர். இந்த கும்பலின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல், போலீசார் திணறிப் போயினர். இந்த கும்பலின் அட்டகாசத்தால் விபத்துகளும் அரங்கேறின. மக்களை மிரள வைத்த கும்பலிடம் இருந்து, 24 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!