News January 23, 2026

சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை (PHOTOS)

image

நாட்டின் 77-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உட்பட பல்​வேறு பிரிவு​களை சேர்ந்தவர்களின் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. இதற்கான கடைசி கட்ட ஒத்திகை இன்று காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்றது. அந்த அணிவகுப்பு ஒத்திகையின் போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Similar News

News February 6, 2026

Global Teacher-ஆக தேர்வான மும்பை டீச்சர்.. ₹9 கோடி பரிசு!

image

மும்பை ஆசிரியை ரூபால் நாகி Global Teacher பரிசை வென்றுள்ளார். துபாயில் நடந்த உலக அரசுகள் உச்சி மாநாட்டில் அவருக்கு ₹9 கோடி பரிசும் அளிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் குடிசை பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை அமைத்த இவர், ஏழை குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். மேலும், சுவரோவியங்கள் மூலம் குழந்தைகளுக்கு பாடங்களுடன் சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வையும் கற்றுக் கொடுத்துள்ளார்.

News February 6, 2026

விஜய் வரி ஏய்ப்பு வழக்கின் பின்னணி.. முழு விவரம்

image

➤2015-ல் விஜய் வீட்டில் நடந்த IT ரெய்டில் புலி படத்திற்காக வாங்கிய கணக்கில் வராத ₹15 கோடி கண்டுபிடிக்கப்பட்டது ➤வருமானத்தை மறைத்ததாக 2022 ஜூன் 30-ல் ₹1.50 கோடியை IT அபராதமாக விதித்தது ➤இதை எதிர்த்து சென்னை HC-ல் விஜய் வழக்கு தொடர, IT-ன் உத்தரவுக்கு கோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது ➤இந்நிலையில், தற்போது (2026) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர, IT விதித்த அபராதத்தை சென்னை HC உறுதி செய்துள்ளது.

News February 6, 2026

வெள்ளி விலை 2 நாள்களில் ₹40,000 குறைந்தது

image

தங்கம் விலையைப் போன்றே வெள்ளி விலையும் இன்று (பிப்.6) குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹20,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. 2 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹40-ம், கிலோவுக்கு ₹40,000-ம் குறைந்துள்ளது. அதேநேரம், தங்கமும் சவரனுக்கு ₹1,600 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!