News November 23, 2024
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு நவ.27, 28 ஆகிய தேதிகளில் 6 செ.மீ முதல் 12 செ.மீ வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு அந்த தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் மழை தொடங்கும் எனவும் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
APPLY NOW: சென்னை கூட்டுறவு துறையில் வேலை

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 194 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <
News August 13, 2025
சென்னையில் 5,970 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை சென்னையில் 5,970 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.
News August 13, 2025
சென்னையில் மின்தடை அறிவிப்பு!

இன்று (ஆகஸ்ட் 13) அடையாறு, காந்தி நகர், கொட்டிவாக்கம், காவேரி நகர், ECR சாலை, பாலவாக்கம், திருமுல்லைவாயல், கோணிமேடு, பெரம்பூர், நாளை (ஆகஸ்ட் 14) கீழ்பாக்கம், மேடவாக்கம், தரமணி, சர்தார்பட்டேல் சாலை, பள்ளிப்பேட்டை, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, வரதராஜபுரம், தாம்பரம், இரும்புலியூர், வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்