News March 25, 2024
சென்னையில் ஐ.பி.எல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல். தொடரின் 17 ஆவது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. தகுதிச் சுற்று போட்டி மே.21 இல் அகமதாபாத்திலும், இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
சென்னை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

சென்னை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும். A – (Jan/Feb/Mar), B – (Apr/May/Jun), C – (Jul/Aug/Sep), D – (Oct/Nov/Dec), காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News February 16, 2026
சென்னை: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு சென்னை மாவட்ட அதிகாரியை (044 – 25264568) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
News February 16, 2026
BREAKING: சென்னை- பிரபல மாலில் தீ விபத்து

சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில் இன்று (பிப்.16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஃபோரம் மாலில் உள்ள முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்த வணிகவளாகத்தில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் வணிகவளாக நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


