News March 22, 2025
சென்னையில் ஐபிஎல் போட்டி: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பார்க்கிங் இடங்கள் மற்றும் மாற்று வழிகள் குறித்த முழுமையான வரைபடத்துடன் பொதுமக்கள் இடர்ப்பாடின்றி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்த மாற்றங்களை பின்பற்றுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காண்பித்து மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்.
Similar News
News March 23, 2025
மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவி பலி

எர்ணாவூர் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அனிதா (14). அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று (மார்.22) இரவு ஈரக்கையால் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பதறிய பெற்றோர், சிறுமியை தூக்கி கொண்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஈரக்கையால் சுவிட்ச் அல்லது செல்போனை சார்ஜ் போடாதீர்கள்.
News March 23, 2025
தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
News March 23, 2025
கள்ளகாதலியுடன் உல்லாசம்: மனைவியின் தரமான செய்க

தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (மார்.21), கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பெண் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி இப்படி பிளான் போட்டு சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.