News November 8, 2025
சென்னையில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்து இயங்காது

சென்னையில் இருந்து நேற்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து கேரள போக்குவரத்து துறை போலீசார் சிறைபிடித்து பொதுமக்களை நடுவழியில் இறக்கிவிட்டனர். 70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளதால் நேற்று இரவு 8 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
சென்னை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

சென்னை மக்களே! உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.
News November 8, 2025
சென்னையில் ஆட்சியர் அதிரடி உத்தரவு

தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் பயணிக்கும் வகையில் பிங்க் ஆட்டோக்களை மானியத்தில் பெண்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கி வருவதாக மீண்டும் புகார் எழுந்து வந்தது. இதனையடுத்து, பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்க சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 8, 2025
சென்னை: 6.42 லட்சம் வாக்காளர்களுக்கு SIR படிவம் விநியோகம்

சென்னை மாநகராட்சியின் தகவலின்படி, மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 4.11.2025 முதல் 7.11.2025 வரை மொத்தம் 6,42,789 வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் (SIR) ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய வாக்காளர்கள் சேர்த்தல், மாற்றம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


