News September 25, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (24.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Similar News
News September 25, 2025
ரவி மோகன் வீட்டில் நோட்டிஸ் ஒட்டிய அதிகாரிகள்

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் ரவி மோகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டில் இன்று (செப்.24) வங்கி அதிகாரிகள் ஜப்தி நோட்டிஸ் ஒட்டினர். அதில், EMI சரியாக செலுத்தாத காரணத்தினால் நோட்டிஸ் ஒட்டப்படுகிறது. ரூ.7.60 கோடி கோடி கடன் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி ஆர்த்தியுடன் ரவி மோகன் இங்கு வாழ்ந்து வந்தார். தற்போது இருவரும் பிரிந்துள்ளதால் EMI செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
News September 25, 2025
இத்தனை ஆண்டு சுமையாக இருந்தது: சீமான்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று (செப்.24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கு பயன் தரும் என்றார் வரியை விதித்தது ஏன்? 2017-ல் விதித்த வரி இத்தனை ஆண்டு மக்களுக்கு சுமையாக இருந்தது. இது கூட தெரியாமல் என்ன ஆட்சி செய்கிறார்கள். இந்த நாட்டில் பிறந்ததை தவிர்த்து வேறு என்ன பிழை செய்தோம்” என்றார்.
News September 24, 2025
பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கொரோனா காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர் பீலா வெங்கடேசன் பீலா வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.