News September 20, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (19.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News September 20, 2025
நாளை தொடங்குகிறது ’சென்னை ஒன்’ திட்டம்

ஒரே டிக்கெட்டில் மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிப்பதற்கான ‘சென்னை ஒன்’ எனும் செயலியை நாளை முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். இதன்படி, பயணியர் வெளியில் செல்லும்போது எந்தெந்த பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம் என்று முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கான வழித்தடங்களை குறிப்பிட்டு கட்டணம் செலுத்தினால், அதற்கு, க்யூ.ஆர்., குறியீட்டு டிக்கெட் மொபைல் போனில் கிடைக்கும்.
News September 19, 2025
சென்னை அம்மா உணவக பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள் 65 ஆயிரம் இருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளதாக அம்மா உணவக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 19, 2025
சென்னை அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

சூளைமேட்டை சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஹாரிஸ் என்பவருடன் 02.02.25 திருமணமானது. பெற்றோர் 100 சவரன் தங்க நகை கொடுத்தும், ஹாரிஸ் மற்றும் தாயார் 200 சவரன், 2 கிலோ வெள்ளி, நிலம் கேட்டு கொடுமைப்படுத்தி அப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றி, பின் அவர் வீட்டிலும் சென்று சங்கீதாவை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வரதட்சணை தடுப்பு குழு விசாரணையில் ஹாரிஸ் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைத்தனர்.