News September 3, 2025
சென்னையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
சென்னைக்கு ஆபத்து

சென்னையில் 2100-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரக்கூடும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் (ம) பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் தலைமையிலான புதிய ஆய்வு கூறுகிறது. ஆய்வில், தூத்துக்குடி கடல் மட்டம் ஆண்டுக்கு -0.17 மி.மீ என குறைந்தும், நாகையில் 0.18 மி.மீ உயர்ந்தும், சென்னையில் ஆண்டுக்கு 0.55 மி.மீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது. இது கடலோர பகுதிக்கு ஆபத்து என எச்சரிக்கிறது.
News September 4, 2025
சென்னையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

சென்னை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
News September 3, 2025
சென்னையில் புதிய மெட்ரோ பாதை!

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.