News January 12, 2026

சென்னையில் இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

image

சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் குளிர்சாத வசதியுடன் மின்சார டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.01.2026) தொடங்கி வைக்கிறார். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, சென்னை அழகை பார்த்து ரசிப்பதற்கும் வசதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 29, 2026

சென்னையில் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

image

சென்னை மெட்ரோ பணிகளுக்காக தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மண்டலம் 9, 10, 13 ஆகிய பகுதிகளில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

News January 29, 2026

சென்னை: காதல் கணவன் விபரீத முடிவு

image

பரங்கிமலையைச் சேர்ந்த கார்த்திக் (21), 6 மாதங்களுக்கு முன்பு பாக்யா என்பவரைக் காதலித்து மணந்தார். அடிக்கடி மதுபோதையில் கார்த்திக் வீட்டிற்கு வந்த போது ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால் மனமுடைந்த கார்த்திக், தனது சித்தியிடம் போனில் தற்கொலை பற்றி கூறிவிட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

மாதவரம் பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திரா நகர், குளபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!