News October 9, 2025
சென்னையில் இன்று! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே

சென்னை மாநகராட்சியின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (09.10.2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரில் தெரிவிக்கலாம்.
Similar News
News October 9, 2025
சென்னை: NLCல் 1000+ காலி இடங்கள்; கைநிறைய சம்பளம்

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 9, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி நாகேந்திரன் மரணம்

வடசென்னை பிரபல தாதாவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்த வழக்கில் ஏ1 குற்றவாளியுமான நாகேந்திரன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். கல்லீரல் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சையில் இருந்ததாகவும், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
News October 9, 2025
சென்னை: நாட்டை உலுக்கிய வழக்கில் கைது!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ சன் பார்மா என்கின்ற மருத்துவ நிறுவனம் நடத்தி வருகிறார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் இன்று (அக். 9) இன்று கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.