News August 6, 2024
சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 6) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தி.நகர், கே.கே. நகர், ஏரிக்கரை சாலை, கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அசோக் நகர், சாலிகிராமம், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், அண்ணா நகர், பட்டாபிராம், சாந்தி காலனி, ஷெனாய் நகர், அம்பத்தூர், இராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Similar News
News February 5, 2026
நடிகர் விஜய் வழக்கில் நாளை தீர்ப்பு!

புலி படத்திற்கான ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்திருந்தது. இதனை எதிர்த்து நடிகரும் தவெக தலைவருமான விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நாளை காலை 10:30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பு வழங்க உள்ளார்.
News February 5, 2026
சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சென்னையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News February 5, 2026
சென்னை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <


