News March 24, 2025
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (மார்ச்.24) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
Similar News
News December 23, 2025
ஜன. 6 முதல் ஜாட்கோ-ஜியோ வேலைநிறுத்தம்

வரும் ஜனவரி 6 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாட்கோ-ஜியோ அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது , புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, நியாயமான ஊதிய விகிதம், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகளை அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோவின் ஏற்காததால் ஜன.6 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் அறிவித்துள்ளனர்.
News December 23, 2025
சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.
News December 23, 2025
வாக்காளர் சிறப்பு முகாமில் 2 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னையில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


