News November 25, 2025
சென்னையில் இனி டிராஃபிக் இல்லை!

சென்னையில் பேருந்துகள் மட்டும் செல்ல தனி வழித்தடம் அமைப்பதற்காக நிலம் அடையாளம் காணும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பிராட்வே-பூந்தமல்லி ஈ.வே.ரா சாலை, நீலாங்கரை-பல்லாவரம் சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகிய 3 சாலைகளில் தனி வழித்தடம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் டிராஃபிக் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 28, 2025
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. 9 ஆண்டுகள் சிறை

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆடிவெள்ளியையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண் காவலருக்கு கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தார். புகாரின் பேரில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, கண்ணனுக்கு 3 பிரிவில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
News November 28, 2025
சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு!

இன்று நவ-28 சென்னை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கிய கணக்கீட்டு படிவங்களை விரைவாக பூர்த்தி செய்து திருப்பி வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இறுதி நாளான டிச.4 வரை காத்திருக்காமல், விரைந்து பூர்த்தி செய்து வழங்க வேண்டும்’’
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்
News November 28, 2025
சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் மகேஸ்வர் -ராக்கி மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் கீர்த்திகா (20), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


