News January 10, 2026

சென்னையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த இணையதளங்களில் <<>>விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 21, 2026

சென்னை வரும் பிரதமர் மோடி

image

நாளை மறுநாள் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெங்கேற்கவுள்ளார். இதற்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23ம் தேதி மதியம் 12:40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு, 2:15 மணிக்கு சென்னை ஏர்போர்ட் வந்தடைகிறார். ஹெலிகாப்டர் மூலம் 2:50 மணிக்கு NDA மாநாட்டுக்கு சென்று, 4:15 வரை மாநாட்டில் பங்கேற்கிறார். பின் 4:20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, 5 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

News January 21, 2026

சென்னை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!

image

சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் இன்று பிற்பகல் சென்ற பைக் மீது லாரி மோதியது. இதில் பைக்கில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரித்ததில், இறந்தவர் அருணாச்சலம் (51) என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

கீழ்ப்பாக்கம் GH-இல் நோயாளி தற்கொலை!

image

சென்னை கீழ்ப்பாக்கம் மருந்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அருணாச்சல மாநிலத்தை சேர்ந்த இலியாகோ (22) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஆறாவது தளத்தில் ரத்த பரிசோதனை செய்ய சென்ற போது, அவருக்கு ரத்த வாந்தி ஏற்படுள்ளது. இதில் மனமுடைந்த அவர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!