News March 23, 2025
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (மார்.23) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News March 24, 2025
சென்னையில் புகழ்பெற்ற 7 சிவன் கோயில்கள்

1. கபாலீஸ்வரர் கோயில்- திருமயிலை, 2. மருந்தீஸ்வரர் கோயில்- திருவான்மியூர், 3. திருவல்லீஸ்வரர் கோயில்- திருவலிதாயம், 4.மாசிலாமணீஸ்வரர் கோயில்- திருமுல்லைவாயில், 5. தியாகராஜ சுவாமி கோயில்- திருவொற்றியூர், 6 .வேதபுரீஸ்வரர் கோயில்- திருவேற்காடு, 7. தேனுபுரீஸ்வரர் கோயில்- மாதம்பாக்கம். ஷேர் பண்ணுங்க.
News March 24, 2025
சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
News March 24, 2025
கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 76.21% நீர் இருப்பு உள்ளதால், இந்த கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சென்னை மாநகருக்கு மாதம் தோறும் 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 8 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.