News November 20, 2024
சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை எடுத்துச் செல்லுங்கள். தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்புள்ளது.
Similar News
News September 9, 2025
சென்னையில் இடியுடன் மழை வெளுக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 9, 2025
விஜயகாந்தின் சகோதரி காலமானார்!

தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின், சகோதரி மருத்துவர் விஜயலட்சுமி (78). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்.09) காலமானார். அவரது இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு விஜயகாந்த் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News September 9, 2025
வடசென்னை, தென்சென்னைக்கு வரும் விஜய்

2026 ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி வடசென்னையில் செப்.27-ம் தேதியும், தென்சென்னையில் அக்டோபர் 25-ம் தேதியும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE)