News August 3, 2024

சென்னையில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 3) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, ராயபுரம், தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மழை பெய்தது.

Similar News

News November 9, 2025

சென்னை: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

உயிர் காக்க உதவிய சென்னை மெட்ரோ

image

பெங்களூருவில் இருந்து, பயணிகள் விமானத்தில் இன்று (நவ-8) சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட நுரையீரலை, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்தது சென்னை மெட்ரோ நிர்வாகம். அதன்படி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வந்ததும், தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரல் கொண்டு செல்லப்பட்டது.

News November 9, 2025

சென்னை ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களை விதிகளை மீறி ஆண்கள் இயக்கினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கடுமையாக எச்சரித்துள்ளார். சமூக நலத்துறை பலமுறை எச்சரித்தும் விதிமீறல் தொடர்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!