News January 2, 2025
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான பனிமூட்டம் காணப்படும்

சென்னையில் அடுத்த வரவுள்ள 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31 – 32 டிகிரி செல்சியசை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
சென்னையில் இன்று மழை வெளுக்கும்

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சில இடங்களில் இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும், சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News September 18, 2025
நாட்டிலேயே சென்னையில்தான் முதல் முறை

சென்னையில் இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ திட்டம் உருவாகிறது. இது சென்னையின் பசுமை வழியாக உள்ள ஆற்காடு சாலையில் 5 கி.மீ நீளத்தில் அமைக்கப்படுகிறது. கீழ் அடுக்கில் Corridor–4, மேலடுக்கு Corridor–5 இயங்கும். 2 பாதைகளும் ஒரே தூண்களில் அமைக்கப்படுவது புதிய முயற்சி. அலுவார்திருநகர், வளசரவாக்கம், கரம்பாக்கம், ஆளப்பாக்கம் ஆகிய நிலையங்களில் இரு அடுக்குகளுக்கும் தனித்தனி மேடைகள் அமைக்கப்படுகிறது.
News September 18, 2025
காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் ஆணையரகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல் துணை ஆணையாளர் G. சுப்புலட்சுமி தலைமையேற்றார். நிகழ்வில் V. V. கீதாஞ்சலி (மத்திய குற்றப்பிரிவு-II), உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.