News March 16, 2026

சென்னையிலேயே விசாரணை நடத்துங்க: விஜய்

image

கரூர் விவகாரம் தொடர்பான விசாரணையை சென்னையில் நடத்தக்கோரி விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி, சிபிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார். கரூர் விவகாரத்தில் இதுவரை 3 முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். ஆனால், தற்போது சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் பணிகள் இருப்பதால், சென்னையில் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News April 13, 2026

ராகுல் காந்தி மனதை மாற்ற முயற்சிக்கிறாரா கமல்?

image

TN-க்கு பிரசாரம் செய்ய ராகுல் ஏன் வரவில்லை? ஸ்டாலினுக்கு அவருக்கும் பிரச்னையா என்ற கேள்விகள் தற்போது அறிவாலயத்தை ஆட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது. எனவே, இது இப்படியே போனால் சரி வராது என நினைத்த திமுக தலைமை, கமலை வைத்து ராகுலை மனம் மாறச்செய்ய காய்நகர்த்துவதாக பேசப்படுகிறது. ஏப்.15-ல் சேலத்தில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு ராகுலை வரவைக்க அவருடைய நெருங்கிய நண்பரான கமல் பேச்சுவாரத்தை நடத்திவருகிறாராம்.

News April 13, 2026

BREAKING: அரசின் தவறால் 100 பேர் பலியான சோகம்!

image

நைஜீரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். போர்னோ மாநிலத்தில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை குறிவைத்து விமானப்படை நடத்திய தாக்குதலில் தவறுதலாக மார்க்கெட் பகுதியிலிருந்த மக்கள் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ளனர். மக்களை காக்கும் அரசே இப்படி செய்யலாமா என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

News April 13, 2026

ஊழல் Vs நல்லாட்சி இடையே நடக்கும் தேர்தல்: நிதின்

image

சாத்தூரில் பரப்புரை செய்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்,
நாட்டிலேயே ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் திமுகவை வீழ்த்தி, அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்தார். தமிழகம் Vs டெல்லி இடையேயான தேர்தல் இது என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இது உண்மையில் ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி என அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்த ஊழல் திமுகவை மக்களே வீழ்த்துவார்கள் எனவும் கூறினார்.

error: Content is protected !!