News September 9, 2025
சென்னையினுள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (09.09.2025)
திருவொற்றியூர், மணலி, மாதவரம், இராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மண்டலங்களின் 11 வார்டுகளில் முகாம் நடைபெறும்.முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்.
Similar News
News September 9, 2025
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள். மீஞ்சூர், பிடிஓ அலுவலகம், நந்தியம்பாக்கம், சிறுவாக்கம், அண்ணாசாலை, கடற்கரை சாலை, கொரட்டூர், மண்ணூர்பேட்டை, முகப்பேர் ரோடு, கண்ணகி நகர், போரூர், ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், பூந்தமல்லி ரோடு, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. (ஷேர் பண்ணுங்க)
News September 9, 2025
சென்னை: INSTA-வில் பிளாக்.. மாணவி தற்கொலை முயற்சி

சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இடையே சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், மாணவியை இன்ஸ்டாவில் பிளாக் செய்துள்ளான். இதில், விரக்தியடைந்த கல்லூரி மாணவி தனியார் ஓட்டலின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 8, 2025
சென்னை: வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

சென்னை மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.