News December 27, 2025

சென்னை:போதையில் காதல் மனைவி அடித்துக்கொலை

image

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த மெக்கானிக் பிரவீன்குமார், மதுபோதையில் தனது மனைவி வித்யாபாரதியுடன் தகராறில் ஈடுபட்டு அவரைத் அடித்து உதைத்துள்ளார். இதில் கட்டிலில் விழுந்து பலத்த காயமடைந்த வித்யாபாரதி, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 29, 2025

சென்னையில் ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 பெறலாம்!

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு சென்னை மாவட்ட அதிகாரியை (044 – 25264568, 91500 56800) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News December 29, 2025

சென்னை: மாநகர பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை

image

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பேசிக்கொண்டு அரசுப் பேருந்துகளை இயக்கக் கூடாது என்றும், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது தங்களது செல்போனை நடத்துநர்களிடம் கொடுக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

News December 29, 2025

சென்னை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!