News November 27, 2025
சென்னைக்கு 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றார். மேலும் வரும் நவ.30 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு வரும் நவ.29 அன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
சென்னை: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
News December 3, 2025
எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் 22 அடி எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 21. 96 அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1350 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும், நீர் தீர்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 3, 2025
தூய்மை பணியாளர்கள் 17-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

சென்னை, அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 17-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக இந்த உண்ணா நிலை போராட்டம் ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


