News August 12, 2025

சென்னைக்கு வந்த விமானத்தில் தீ விபத்து

image

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு விமானம், இன்று (ஆகஸ்ட் 12) காலை ஓடுபாதையில் தரையிறங்கியது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 4ஆவது இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது. இதை உடனடியாக கண்டறிந்த விமானி, பத்திரமாக விமானத்தை தரை இறக்கியுள்ளார். மேலும் விமானம் நிறுத்தப்பட்டதும், இழுவை வாகனங்கள் மூலம் விமானம் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தீயணைக்கப்பட்டது.

Similar News

News August 12, 2025

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்த பெண்

image

சென்னை ஐகோர்ட்டில் இன்று ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் அதிருப்தி அடைந்த சிறுமி ஐகோர்ட் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் GH-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News August 12, 2025

சென்னையில் தொடர் போராட்டம் ஏன்?

image

சென்னை மாநகராட்சியின் 15மண்டலங்களில் 11மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக 2,000-த்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.22,000 ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆக.1ம் தேதி முதல் சில மண்டலங்களில் தூய்மை பணி தனியார் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (<<17381810>>தொடர்ச்சி<<>>)

News August 12, 2025

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் (2/2)

image

அப்படி தனியார் வசம் ஒப்படைப்பதால் ரூ.16,000 மட்டும் ஊதியம் வழங்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், பணி நிரந்தம் செய்ய கோரியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல், கோவிட் காலத்தில் எங்களை தெய்வமாக பார்த்தவர்கள், தற்போது தூக்கி போட்டார்கள் என கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!