News September 4, 2025
சென்னைக்கு மழை வாய்ப்பு

தமிழ்நாட்டில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் வரும் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் 8ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது
Similar News
News September 7, 2025
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 09.09.2025 – 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்கு காலை 5 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் மெட்ரே ரயில்கள் இயக்கப்படும். காலை 6.30 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எந்த மாற்றமும் இன்றி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
சென்னை: கேட்ட வரங்களை தரும் நிமிஷாம்பாள்

சென்னை பாரிமுனையில் உள்ள அன்னை காளிகாம்பாள் கோவில் அருகில், மிக குறுகலாக ஒரு பகுதியில் தான் அன்னை நிமிஷாம்பாள் கோயில் அமைந்துள்ளது. தசமி திதியில் இந்த கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள். தொடர்ந்து பத்து தசமி திதியில் வந்து வழிபட்டால் 5வது தசமி நிறைவடைவதற்குள்ளாகவே அன்னை பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News September 6, 2025
சென்னை: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

சென்னை மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<