News September 11, 2025
சென்னைக்கு இடி, மின்னலுடன் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, சென்னைக்கு இன்று(செப்.11) இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.
Similar News
News September 11, 2025
சென்னையில் MTC சலுகை மாதாந்திர பாஸ் திட்டம் அறிவிப்பு

சென்னையில் குறைந்த செலவில் பயணிக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் மாதாந்திர சலுகை பாஸ் திட்டம் மூலம் ரூ.1000 பாஸ் மூலம் ஏ.சி. பேருந்துகளை தவிர்த்து அனைத்து பேருந்துகளிலும் வரம்பற்ற பயண வசதி வழங்கப்படுகிறது. ரூ.2000 பாஸ் மூலம் ஏ.சி. பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் வரம்பற்ற பயணம் மேற்கொள்ளலாம்.
மாதாந்திர பாஸ் வழங்கும் இடங்களை காண: https://mtcbus.tn.gov.in/Home/travelasyou/11 பார்க்கலாம்.
News September 11, 2025
மெரினா பீச்சில் இப்படியா?

மெரினா கடற்கரையில், நீலக்கொடி கடற்கரை என அறிவிக்கப்பட்ட, 20 ஏக்கர் பகுதியை மட்டும் சுத்தமாக வைப்பதில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது. அதையொட்டியுள்ள மற்ற பகுதிகளில் ஆங்காங்கே, கண்ணாடி பாட்டில் கள் உடைந்து கிடப்பது, கடற்கரைக்கு வருவோரின் கை, கால்களை பதம் பார்த்து வருகிறது. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
News September 11, 2025
சென்னையில் 12 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (11.09.2025) 12 இடங்களில் நடைபெற உள்ளது. திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம்கள் நடைபெறும். ஷேர் பண்ணுங்க.