News March 31, 2025
சென்னிமலை முருகன் பற்றி தெரியுமா?

நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சண்டையில், மேரு மலை உடைந்து. இதில் சிகரப் பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இதற்கு, சிரிகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற பெயர்களும் உண்டு. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்த கோயில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். தீமைகளை விரட்டும், சர்வ வல்லமை கொண்ட கடவுளாக, இங்கு முருகன் வீற்றிருக்கிறார். இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்பு தலமாகும்.
Similar News
News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
News April 2, 2025
BREAKING: தங்கையை கொன்ற அண்ணன் கைது

திருப்பூர், பருவாய் கிராமத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதில் சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று புதைக்கப்பட்ட அவரின் உடலை தோண்டி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனை மற்றும் போலீசாரின் விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆணை காதலித்ததால் வித்யாவின் சகோதரர் சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 2, 2025
கல்லூரி மாணவி இறப்பில் மர்மம்

பல்லடத்தைச் சேர்ந்தவர் வித்யா(22). கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ந்தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்ற போது வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் புதைத்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வித்யா உடலை தோண்டியெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.