News March 31, 2025
சென்னிமலை அருகே விபத்தில் இளைஞர் பலி!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று மாலை, மாரியம்மன் கோவில் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த, ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் நவீன், லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி, லாரிக்குள் விழுந்ததால், லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 2, 2026
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!!!

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பிப். 09 முதல் பிப்.24 ஆம் தேதி வரை Jute Bags, Files, Ladies Bags, Wallets தயாரித்தல் பயிற்சி நடைபெறுகிறது.பயிற்சி, சீருடை, உணவு, ஹாஸ்டல் வசதி அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 8778323213,0424-2400338 SHAREIT
News February 2, 2026
அம்மாபேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்: அதிரடி கைது!

அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூனாச்சியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 41 அவர் கர்நாடக மாநில மது பாட்டில்கள் குட்கா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 2, 2026
ஈரோட்டில் பெரும் முறைகேடா?

ஈரோடு அருகே காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் லுங்கி குடோன் உள்ளது. அங்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் அங்கு வந்த ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இது குறித்து எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, இதனால் மக்கள், ஊடகத்தினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


